என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் தப்பி ஓட்டம்"
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ராமு, போலீஸ்காரர் சக்கிவேல், ஊர்க்காவல் படை வீரர் அண்ணாசாமி ஆகியோர் கோட்டூர்புரம் லாக் தெருவில் போலீஸ் ஜீப்பில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை வாலிபர் வேகமாக ஓட்டினார். இதனால் போலீசாரின் சந்தேகம் வலுத்தது. அவர்கள் மோட்டார் சைக்கிளை விரட்டி சென்றனர். அப்போது அந்த வாலிபர் தான் வைத்திருந்த பையை தூக்கி வீசினார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்.
போலீசார் விரைந்து சென்று பையை எடுத்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பணப்பையை பத்திரமாக போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பணத்தை எண்ணி பார்த்தனர். அதில் ரூ.1 கோடியே 56 லட்சம் பணம் இருந்தது. இந்த பணம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பணத்தை எடுத்துச் சென்ற வாலிபர் யார்? அவர் எங்கிருந்து யாருக்காக ரூ.1½ கோடியை கொண்டு சென்றார்? என்பது தெரியவில்லை.
ரூ.1½ கோடி பணமும் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணத்தை போட்டு விட்டு தப்பிச் சென்ற நபரை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பணத்தை எடுத்துச் சென்ற வாலிபரின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கோட்டூர்புரம் லாக் தெருவில் நேற்று இரவு நடமாடியவர்கள் யார்-யார்? என்பதை செல்போன் தொடர்புகள் மூலம் கண்டு பிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் ஹவாலா பணபரிமாற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டியுள்ளனர். இப்படி பல கோணங்களில் மர்ம வாலிபரை பிடிக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே புதுக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 32). இவரது மனைவி ஷீலா (24). இவர்களுக்கு ரித்தீஷ் (4) , பிரதீஷ் (3 மாதம்) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆறுமுகசாமி திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு வேலை முடிந்து வழக்கம் போல் வீடு திரும்பினார். அப்போது இரவில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப் படுகிறது.
இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்த ரித்தீஷ் நீண்டநேரமாக அழுது கொண்டிருந்தான். இதனால் குழந்தை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் ஷீலா கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே 3 மாத குழந்தை பிரதீசும் பிணமாக கிடந்தான்.
தாயும், குழந்தையும் அருகருகே கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆறுமுகச்சாமியும் வீட்டில் இருந்து வெளியே சென்று தலைமறைவாகி விட்டார்.
இதைதொடர்ந்து தாய்- குழந்தை கொலை சம்பவம் பற்றி செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பாபநாசம் போலீஸ் டி.எஸ்.பி. செல்வராஜ் (பொறுப்பு), பூதலூர் இன்ஸ்பெக்டர் கரிகால சோழன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், கங்காதரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தாய்-குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட ஷீலாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வர்க்கோட்டை அருகே உள்ள சோளகம்பட்டி கிராமம் ஆகும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகச்சாமிக்கும், ஷீலாவுக்கும் திருமணம் நடந்தது. இருவருமே பட்டதாரிகள் ஆவர்.
இந்த நிலையில் மனைவி ஷீலாவை கழுத்தை அறுத்தும், 3 மாத குழந்தையை கழுத்தை நெரித்தும் ஆறுமுகச்சாமி கொலை செய்ததை ஏன்? என்று தெரியவில்லை. தற்போது தலைமறைவாக இருக்கும் ஆறுமுகச்சாமியை பிடித்து விசாரித்தால் மட்டுமே கொலைக்காக காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மனைவி-குழந்தையை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பூதலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை கிராமத்தில் சுக்ரீவன் வழிபட்டு வணங்கிய பழமையான சிவன்கோயில் உள்ளது. வடிவழகி என்ற சவுந்தரநாயகி அம்மன் உடனமர் சவுந்தரேஸ்வரசுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கும் இக்கோயிலில் திருப்பணிகள் நீண்ட நாட்களாக பக்தர்கள் உதவியுடன் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலை வழக்கம்போல் பணியாளர்கள் கோவிலை திறந்து அன்றாட பூஜைக்கு தயாராகினர். அப்போது குருக்கள் பாலாஜி வந்திருந்த பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து வந்தார். அப்போது 30வயது மதிக்கக்கூடிய வாலிபர் ஒருவர் அர்ச்சனை செய்துவிட்டு சன்னதியை சுற்றிவந்தார். இந்த வேளையில் குருக்கள் பாலாஜி பிரசாத தயாரிப்பில் ஈடுபட்டார். இதனை நோட்டமிட்ட வாலிபர் திடீரென்று கருவறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கட்டிங் பிளேடால் வடிவழகி அம்மன் கழுத்தில் இருந்த தங்க செயினை துண்டித்து எடுத்து கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டார்.
இதனை பார்த்த குருக்கள் சந்தேகம் அடைந்து சாமியை பார்த்தபோது கழுத்தில் இருந்த தங்க செயின் திருட்டு போனது தெரியவந்தது. குருக்கள் சத்தமிட்டு மக்களை கூப்பிட்டதும் மர்மநபர் தப்பி சென்று விட்டார்.
இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் ஜவகர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில் அறந்தாங்கியை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 29-ந்தேதி காலை அறந்தாங்கியில் வைத்து மனோகரன் கைது செய்யப்பட்டார். அவரை நேற்று திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், ஆயுதப்படை காவலர் பாலமுத்து ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி கைதி மனோகரன் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பல்வேறு குழுவாக பிரிந்து சென்று தேடி வருகின்றனர்.
கைதி தப்பியோடிய சம்பவம் முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்